எதிரி கோட்டையினுள் நான்:புதிய வழக்குகள் தயார்!





நான் எதிரியின் கோட்டைக்குள்ளேயே சென்று சிங்களத்தில் பேசிவிட்டு வந்திருக்கிறேன் என யாழ்ப்பாணத்தில் இராமநாதன் அர்ச்சுனா வீர உரையாற்றியுள்ள நிலையில் அனுராதபுரம் பொதுஜன பெரமுனவின் கூட்டத்தில் தடைசெய்யப்பட்ட அமைப்பொன்று ஊக்குவிக்கப்பட்டதாக  தெரிவித்து ஒன்றிணைந்த எதிர்க்கட்சி தாக்கல் செய்த முறைப்பாடு தொடர்பான மேலதிக விசாரணைகள் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளன

இதனிடையே தேர்தல் பிரசாரத்திற்காகத் தேசிய மக்கள் சக்திக்கு புலம்பெயர் தமிழர்கள் நிதி உதவி வழங்கியதாகப் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா முன்வைத்த குற்றச்சாட்டுகளை அரசாங்கம் இன்று நிராகரித்துள்ளது.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ அதனை தெரிவித்துள்ளார்.

அதன்படி, அர்ச்சுனா வெளியிட்ட பொய் அறிக்கைகளுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அநுராதபுரத்தில் நடைபெற்ற சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் கூட்டத்தில், விடுதலைப் புலிகள் அமைப்பை ஊக்குவிக்கும் வகையில் அர்ச்சுனா சமீபத்தில் உரையாற்றினார் எனக் கூறப்படும் சம்பவம் குறித்து காவல்துறையினரிடமும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடமும் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அரச அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.


No comments