இரண்டாம் சுற்று : மேலும் பலர் உள்ளே!
இலங்கை ஜனாதிபதி தனது பதவிக்காலத்தின் இரண்டாவது ஆண்டினை பூர்த்தி செய்துள்ள நிலையில் அடுத்துவருங்காலத்தில் எதிர் தரப்பு கட்சி தலைவர்களை வேட்டையாட முற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் முன்னாள் அரச புலனாய்வு சேவை பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஸ் சாலேவின் கைதை மையப்படுத்தி அதற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட போராட்டங்களின்போது நீதித்துறைக்கெதிராக வெளியிடப்பட்ட கருத்துக்கள் தொடர்பில் விசாரணை வளையத்தினுள் மேலும் ஆறு கட்சி தலைவர்கள் கொண்டுவரப்பட்டுள்ளனர்.
அவர்கள் மீதான நீதிமன்ற அவமதிப்பு முறைப்பாட்டின் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, திலித் ஜயவீர உள்ளிட்ட ஆறு பேருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு முறைப்பாடு முன்வைக்கப்படடுள்ளது.
அவர்கள் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு முறைப்பாட்டில் அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முறைப்பாட்டில் விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, திலித் ஜயவீர, சுகீஸ்வர பண்டார, அசங்க நவரத்ன மற்றும் மகிந்த பதிரண ஆகிய ஆறு பேருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
ஏற்கனவே நாமல் ராஜபக்ச அண்மையில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Post a Comment