பூநகரி பொன்னாவளி - கிராஞ்சி:இனி இல்லை!

 




அபிவிருத்தியின் பெயரால் கிளிநொச்சியின் பூநகரி பொன்னாவளி கிராஞ்சி கிராமசேவையாளர் பிரிவுகளில் காற்றாலை திட்டம் கனியமணல் அகழ்வு திட்டம் மற்றும் சுண்ணக்கல் அகழ்வு திட்டம் என்பனவற்றை அரசாங்கம் நடைமுறைப்படுத்த எண்ணியுள்ளது. இதனால் அங்கே வாழுகின்ற சுமார் 2000 குடும்பங்கள் அவர்களின் வாழ்வாதாரங்களை இழக்கவுள்ளனர்.

பூநகரி பிரதேச செயலாளர் பிரிவில் கனிய மணல் அகழ்விற்கென 16 சதுர கிலோமீட்டர் தெரிவு செய்யப்பட்டுள்ளது.அதில் 13 சதுர கிலோமீட்டர் பகுதி பொன்னாவெளி மற்றும் கிராஞ்சி கிராம சேவையாளர் பிரிவுகளின் மக்கள் குடியிருப்புகளை உள்வாங்கி உள்ளது.

வலைப்பாட்டு கிராமத்தின் எருமை தீவு கடற்கரையில் இருந்து உள்நோக்கி ஒரு கிலோமீட்டர் அகலம் மேற்கு நோக்கி ஆறு கிலோமீட்டர் நீளம் வரை அதாவது பேய்முனைகீரிகுடா பகுதி வரை அதற்காக தெரிவு செய்யப்பட்டுள்ளது.

அதேபோல பாலாவி பொன்னாவளிக்கிடையே பெரிய அடிப்பாடு கடற்கரையில் இருந்து உள்நோக்கி 2 சதுர கிலோமீட்டர் பிரதேசம் தெரிவு செய்யப்பட்டுள்ளது இது கடற் தொழிலாளிகள் தொழில் செய்யும் இடமாகும். அதேபோல மண்டைக்கல்லாற்றின் கடலில் கலக்கும் இடத்திலிருந்து பாலாவி வரை மூன்று சதுர கிலோமீட்டர் பிரதேசம் அதற்காக தெரிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் கிராஞ்சி கிராமத்தில் பிருந்தாவனத்தில் இருந்து நொச்சிமுனை ஆறு வரை இரண்டு சதுர கிலோமீட்டர் பிரதேசம் கடற்கரை ஓரமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது அவை எல்லாம் கடற் தொழிலாளிகளின் துறைமுக பிரதேசங்கள் ஆகும் 


No comments