வாழ்நாள் தேசிய பட்டியல் அமைச்சர்:அவிழ்த்து விடுகிறார்!
பாதுகாப்பு அமைச்சின் தலைமையில் காணி விடுவிப்பு எனும் போர்வையில் மூடிய அறைக்குள் ஒரு சில கூட்டங்கள் நேற்று நடைபெற்றது. கூட்டம் நடைபெற்றது முடிந்ததும் வெளியில் வந்த மக்களால் தெரிவு செய்யப்படாத வாழ்நாள் தேசிய பட்டியல் அமைச்சர் சந்திரசேகர் காணி விடுவிப்பிற்குரிய சாதகமான நடவடிக்கைகள் எட்டப்பட்டுள்ளதாக ஊடகங்களுக்கு முன் வழமை போன்ற அப்பட்டமான பொய்யை கூறியுள்ளார் என குற்றஞ்சுமத்தியுள்ளார் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்.
காணிகளை விடுவிப்பது தொடர்பில் இராணுவத்தினர் சாதகமான எந்தவொரு முடிவையும் அறிவிக்கவில்லை. மக்களின் பல கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டிருந்தது.காணி விடுவிப்பு தொடர்பில் இராணுவத்தினர் எந்த விதமான சாதகமான பதிலையும் தெரிவிக்காத நிலையில் , கடற்தொழில் அமைச்சர் மக்களை ஏமாற்றும் விதமாக கருத்துக்களை தெரிவித்துள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மேலும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
காணி விடுவிப்பு தொடர்பில் ஆளுநர் செயலகத்தில் நேற்றையதினம் செவ்வாய்க்கிழமை பாதுகாப்பு பிரதி அமைச்சரின் பங்கேற்புடன் உயர்மட்ட கூட்டம் நடைபெற்றது.
அதில் இராணுவ தரப்பினர் காணி விடுவிப்பு தொடர்பில் எந்தவொரு சாதகமான பதிலையும் தெரிவிக்காமையே கூட்டம் நிறைவடைந்துள்ளது.
மக்கள் எதிர்பார்க்கும் எந்தவொரு முடிவினையும் சாதகமாக எடுக்காமல் , காணி விடுவிப்பு தொடர்பில் இராணுவத்தினர் பல சமயங்களில் திட்டவட்டமாக நிராகரித்தும் , சில விடயங்களில் பரிசீலிப்போம் என தட்டிக்கழிக்கும் பதிலையும் கூறியுள்ளனர் .
மக்கள் எதிர்ப்பார்க்கும் எந்தவொரு விடயமும் சாதகமாக முடிவெடுக்கப்படவில்லை, ஆனால் மூடிய அறைக்குள் நடைபெற்ற கலந்துரையாடல் தொடர்பில் , கடற்தொழில் அமைச்சர் பொய்களை அவிழ்த்துள்ளதாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

Post a Comment