பிள்ளையான் றோ பிரதிநிதியா?
ஈஸ்டர் குண்டு தாக்குதல் தொடர்பான அசாத் மௌலானாவின் நீண்ட வாக்குமூலத்தில் கிழக்கு மாகாண சபைத் தேர்தல் முடிந்து பிள்ளையான் முதலமைச்சர் ஆக்க பட்ட பின்னர் தங்களை கேரளாவில் ஒரு பயிற்சி என அழைத்தார்கள் என பதிவு செய்து இருக்கின்றார்
பயிற்சி முடிந்தவுடன் தங்களை கொச்சியில் தங்கும்படி கேட்டபட்டதாக சொல்லியிருக்கின்றார் . அதன் பின்னர் நாம் கொச்சியிலிருந்து புது டெல்கிக்குப் அழைத்து செல்லப்பட்டு தங்க எவைக்கப்பட்டோம் .
அங்கே 10 யூன் 2010 புலனாய்வு சேவை அமைப்பின் தலைவரை சந்தித்தாக சொல்லியிருக்கின்றார்
தங்களுக்கு உதவி செய்வதற்காக இந்தியத்தூதரகத்தில் இளங்கோ என்ற அதிகாரியை நியமிப்பதாக வாக்குறுதி வழங்கப்பட்டதாக சொல்லியிருக்கின்றார்
சந்திப்பு முடிந்து நாம் மீண்டும் திரும்பும்பொழுது எங்களிடம் ஒரு தபால் உறை வழங்கப் பட்டது என்றும் அதனுள் 25,000 அமெரிக்க டொலர் அளவில் இருந்தது என்றும் பதிவு செய்திருக்கின்றார்
இதனிடையே அரசியல் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காகவே உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்றும், அதன் உண்மையானமுன்னாள் அரச புலனாய்வுத் துறையின் பிரதானி சுரேஸ் சாலே என்றும், அதற்கான திட்டங்களை அவரே வகுத்தார் என்றும் அஸாத் மௌலானா வழங்கிய வாக்குமூலத்தின் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி திலீப பீரிஸ் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.
முன்னதாக ஆரம்பத்தில் வட மாகாணத்தில் உள்ள இராணுவ முகாமொன்றை இலக்கு வைத்துத் தாக்குதல் நடத்தவோ அல்லது தெற்கில் ஒரு கூட்டுப் படுகொலையை அரங்கேற்றவோ திட்டமிடப்பட்டிருந்தது. எனினும், பின்னர் அத்திட்டங்கள் கைவிடப்பட்டு, சில மாதங்களில் வரவிருந்த தேர்தலைக் குறிவைத்து, சுரேஸ் சாலேவின் வழிநடத்தலின் கீழ் உயிர்த்த ஞாயிறன்று கத்தோலிக்க தேவாலயங்கள் மீது தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அம்பலமாகியுள்ளது.

Post a Comment