புத்தர் சிலை:இராணுவ வீரர்கள் கைது?
கண்டி நகரில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள பழங்கால புத்தர் சிலையை சட்டவிரோதமாக விற்பனை செய்ய முயன்ற இரண்டு ஓய்வுபெற்ற இராணுவ வீரர்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிலையின் எடை: சுமார் 54 கிலோ கிராம் எடையுள்ள செப்பு புத்தர் சிலை கைதானவர்கள் - பெல்கஹதென்ன மற்றும் ஆகரதென்ன பகுதியைச் சேர்ந்த 50 மற்றும் 56 வயதுடைய ஓய்வுபெற்ற இராணுவத்தினர்.
விசாரணையில், இந்த சிலையை ஒரு புத்த துறவி கொடுத்ததாகவும், இதன் உண்மையான மதிப்பை அறிந்து வருமாறு அவர் கூறியதாகவும் சந்தேகநபர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
கைப்பற்றப்பட்ட சிலை மேலதிக ஆய்வுகளுக்காக தொல்பொருள் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Post a Comment