முன்னாள் பீடாதிபதி வீட்டு திருடர்கள் அகப்பட்டனர்!
வடமராட்சியில் முன்னாள் யாழ்.பல்கலைக்கழக கலைப்பீடாதிபதி வீட்டில் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.வவுனியா நெடுங்கேணி பகுதியில் பதுங்கியிருந்த நிலையில் திருடர்கள் இருவரும் கைதாகியுள்ளனர்.
முன்னாள் யாழ்.பல்கலைக்கழக கலைப்பீடாதிபதி வீட்டில் திருட்டு முயற்சி வெற்றி பெற்றிராத நிலையில் உடுப்பிட்டி கம்பர்மலைப்பகுதியில் வீடொன்றினுள் சுமார் ஒரு கோடி இருபது இலட்சத்தை கொள்ளையிட்ட பின்னர் திருடர்கள் தப்பித்து நெடுங்கேணியில் பதுங்கியிருந்த நிலையில் பணத்துடன் பிடிப்பட்டுள்ளனர்.
வீட்டின் சமையலறை ஊடாக புகுந்த திருடர்களே வீட்டில் இருந்த பணத்தை களவாடி சென்றுள்ளனர்.
அதேவேளை, உடுப்பிட்டி பகுதியில் உள்ள வீடொன்றினுள் புகுந்த திருடர்கள் வீட்டில் இருந்த 25 பவுண் தங்க நகைகளை திருடி சென்றுள்ளனர் வீட்டு உரிமையாளர் காலையில் எழுந்த போது, வீட்டின் முன் பக்க கதவுகள் திறந்து இருப்பதனை அவதானித்து , நகைகள் வைத்த இடத்திற்கு சென்று பார்த்த போது, நகைகள் களவாடப்பட்டு இருந்துள்ளது.
நகைகள் களவாடப்பட்டமை தொடர்பில் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Post a Comment