விசாரணைக்கு தயார்:நாமல்!

 



சிறீலங்கன் எயர்லைன்ஸ் விமான கொள்வனவு மோசடி தொடர்பில் மகிந்த ராஜபக்ச மகன் நாமல் ராஜபக்ச கைதாகலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.  இந்நிலையில் விசாரணைக்கு ஒத்துழைப்பதே எங்கள் நிரபராதித்துவத்தை நிரூபிக்க சிறந்த வழி என்று நாங்கள் நம்புகிறோம், எனவே நாங்கள் எந்நேரமும் விசாரணைக்கு வருவோம்," என்று சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் முன் மஹிந்த ராஜபக்ச நாளை (12) முன்னிலையாவாரா என்பது குறித்த பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும்போது,  நாமல் ராஜபக்ச கருத்து தெரிவிக்கையில்,

எங்களுக்குச் சொல்லப்படும்போதெல்லாம் நாங்கள் செல்வோம். அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து, அச்சுறுத்தி பயணத்தை எங்களால் மேற்கொள்ள முடியாது. எனவே, ஒரு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பது தெளிவாகிறது. ஆகையால், எங்கள் நிரபராதித்துவத்தை நிரூபிக்க சிறந்த வழி விசாரணைக்கு ஆதரவளிப்பதே என்று நாங்கள் கருதுகிறோம்.

ஆனால் மறுபுறம், விசாரணைக்கு அழுத்தம் கொடுப்பதும், சாட்சிகளை வலுக்கட்டாயமாக வாக்குமூலம் அளிக்கச் செய்வதுமான செயல்திட்டம் செயல்படுத்தப்பட்டால், அது நியாயமானதாக இருக்காது. இறுதியில், நாட்டு மக்கள் அதற்கான விலையைக் கொடுக்க வேண்டியிருக்கும்.ஏனெனில், அவர்கள் மக்களை ஏமாற்றுவதற்காக அதைச் செய்கிறார்கள்.

இருப்பினும், அரசாங்கம் பல விடயங்களை மூடிமறைக்க முயற்சிப்பதால் எதிர்க்கட்சி ஒரு விசாரணையை விரும்புகிறது. ஏனெனில், நிதி அமைச்சக சம்பவத்தில் ஒரு மரணத்திற்காக எண்பது மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டதை நாங்கள் கண்டோம், அது உடனடியாக ஒரு தற்கொலையாக மூடிமறைக்கப்பட்டமெனவும் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். 


No comments