திருமலை:மருத்துவர்கள் பணி நீக்கம்!




 

திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலையில் பணிபுரியும் மகப்பேறு மற்றும் பெண்கள் நல ஆலோசகர் டாக்டர் ஓ.வி.ஜி.எல். வீரசேனவும் ( லலீந்திர), மூத்த மருத்துவ அதிகாரி டாக்டர் எஸ்.ஏ.என். சியம்பலாபிட்டியவும் தற்காலிகமாக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

ஏப்ரல் 9 அன்று  மருத்துவ அதிகாரிகள் சங்க வேலைநிறுத்தம் நடந்தபோது,  திலக்ஷிகா என்ற கர்ப்பிணி பெண்ணின் பிரசவத்தின் போது குழந்தை உயிரிழந்த சம்பவத்தையடுத்து சுகாதார அமைச்சு விசாரணை நடத்தியது.

விசாரணையில் தெரியவந்தாவது, பிரசவ அறையில் இருந்த நோயாளியை பார்க்க மருத்தவர்களுக்கு 6 முறை தொலைபேசியில் அழைப்பு விடுக்கப்பட்டது.

ஆனால், அவர்கள் மருத்துவமனைக்கு வரவில்லை.அதே நேரத்தில் அருகிலிருந்த தனியார் மருத்துவமனையில் சிசேரியன் அறுவைசிகிச்சை செய்து கொண்டிருந்தனர்.

பின்னர் அரசு மருத்துவமனையில் பணியில் இருந்ததாக போலியான பதிவுகள் அதிகாரப்பூர்வ பதிவேட்டில் செய்திருந்தனர்.

இதனால் அரசு பணிநேரத்தில் தனியார் மருத்துவமனையில் வேலை செய்தது, கடமையை புறக்கணித்தது, தாய் மற்றும் குழந்தையின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தியது.

என்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அவர்கள் இருவரையும் இடைநீக்கம் செய்துள்ளார். மேலும், இடைநீக்க காலத்தில் நாட்டை விட்டு வெளியே செல்லக்கூடாது என்றும், முகவரி மாற்றம் இருந்தால் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 குறித்த வைத்தியருக்கு இது ஒன்றும் புதிதல்ல. வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் இவருடைய காலத்திலேயே அதிக சிசு மரணம் பதிவாகியுள்ளது.


No comments