திருவள்ளுவர் யாரிடம்!



இந்திய அரசினால் கட்டிவழங்கப்பட்ட யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தின் நம்பிக்கை நிதியத்திற்கு தனது தரப்பு ஆதரவாளர்களை தேசிய மக்கள் சக்தி பரிந்துரை செய்துள்ளது.

அவர்களுள் கட்சி பிரமுகரும் யாழ் பல்கலை விரிவுரையாளருமான விமல் சுவாமிநாதன் சட்டத்தரணி தேவராஜா தமிழரசுக்கட்சி சார்பு முன்னாள் யாழ் வணிகர் கழக தலைவர் ஜெயசேகரன் நடன ஆசிரியர் சாந்தினி சிவநேசன் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அதேவேளை யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தின் நம்பிக்கை நிதியத்திற்கு யாழ் மாநகரசபையினால் பேராசிரியர் சிவக்கொழுந்து சற்குணராசா (முன்னாள் துணைவேந்தர்,யாழ் பல்கலைக்கழகம்) சிரேஸ்ட விரிவுரையாளர் கோசலை மதன் (சட்டத்துறை  தலைவர், யாழ் பல்கலைக்கழகம்) மற்றும் பேராசிரியர் தாமோதரம்பிள்ளை சனாதனன் (நுண்கலைத்துறை, யாழ் பல்கலைக்கழகம்) பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

எனினும் யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தின் நம்பிக்கை நிதியத்திற்கு யாழ் மாநகரசபையால் பரிந்துரைக்கப்பட்ட புத்திஜீவிகள் புறக்கணிக்கப்பட்டு ஆளும் கட்சி சார்பில்  பரிந்துரைக்கப்பட்டவர்களே நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக உள்ளக தகவல்கள் வெளியாகியுள்ளன.


No comments