அடுத்து யார் உள்ளே? பரபரப்பில் தெற்கு!
எதிர்வரும் 25ஆம் திகதி இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியொருவர் நீதிமன்றத்தினால் வழங்கப்படவுள்ள தீர்ப்பொன்றின் பிரகாரம் கைதாகலாமென கொழும்பு பரபரப்படைந்துள்ளது.
அதனை கைதட்டி வரவேற்பதற்குத் தயாராக இருக்குமாறு ஜனாதிபதி அனுர தனது மேதின பொதுக்கூட்டத்தில் வெளிப்படுத்தியுள்ளார்.
இதனிடையே ஜனாதிபதியின் கூற்றானது, சுதந்திரமான நீதித்துறைச் செயற்பாட்டின் மீது விடுக்கப்பட்ட பாரிய அச்சுறுத்தலாகும். இந்தக் கூற்றின் மூலம் நீதிமன்றத்தை நிறைவேற்று அதிகாரத்தின் விருப்பத்திற்கு அடிபணியச் செய்வதற்கு எடுக்கும் முயற்சியாகவே நாம் அதனைக் கருதுகிறோம். நீதிமன்றத்தினால் வழங்கப்படவுள்ள தீர்ப்பு குறித்து ஜனாதிபதி முன்கூட்டியே அறிந்துள்ளார் என்பதையே அவரது கூற்று உணர்த்துகின்றதென எதிர்கட்சி தலைவர் சஜித் பிறேமதாச தெரிவித்துள்ளார்.
;நீதிமன்றம் அரசியலமைப்பிற்கே பொறுப்புக்கூற வேண்டுமே தவிர, நிறைவேற்று அதிகாரத்திற்கு அல்ல என்பதையும், இலங்கையில் நீதிமன்றங்களுக்கு அதிகாரம் கிடைப்பது மக்களிடமிருந்தும் அரசியலமைப்பிலிருந்தும் தானேயன்றி, எந்தவொரு ஜனாதிபதி, அமைச்சர் அல்லது அரசியல் கூட்டணியின் விருப்பத்தின் பேரில் அல்லவெனவும் சஜித் பிறேமதாச தெரிவித்துள்ளார்.
குpழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் கைது மற்றும் முன்னாள் தேசிய புலனாய்வு பணிப்பாளர் சுரேஸ் சாலே கைதுகளை தொடர்ந்து தற்போது சூத்திரதாரியை அண்மித்துவிட்டதாக ஜனாதிபதி தனது உரையில் தெரிவித்திருந்தார்.
;.

Post a Comment