செம்மணி சவப்பெட்டி வெளியே!
செம்மணி புதைகுழியில் சர்ச்சைக்குரிய முறையில் புதைக்கப்பட்ட சவப்பெட்டி இன்று அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.
சவப்பெட்டிக்குள் பெண் ஒருவருடைய எலும்புக்கூடும், காப்பு, நாணய குற்றி போன்ற பொருட்களும் காணப்பட்டுள்ளது.
மேலும் இன்றைய நாள் அகழ்வின் போது புதிதாக 5 எலும்புக்கூடுகள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. அதேவேளை இரண்டு எலும்புத் தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
இன்று புதிதாக அடையாளம் காணப்பட்ட 5 எலும்புக்கூடுகளுடன் சேர்த்து அப்புதைகுழியில் மொத்தமாக அடையளாம் காணப்பட்டுள்ள எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 255 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் அங்கு இன்று புதிதாக அகழ்ந்து எடுக்கப்பட்ட இரு எலும்புக்கூட்டுத் தொகுதியுடன் சேர்த்து அங்கு மொத்தமாக அகழ்ந்து எடுக்கப்பட்ட எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 249 ஆக அதிகரித்துள்ளது.
இதனிடையே அங்கு கண்டறியப்பட்ட பச்சிளங்குழந்தையொன்றின் எலும்புக்கூடு மிக கவனமாக இன்றைய தினம் நிபுணர்களால் மீட்டு எடுக்கப்பட்டுள்ளது.

Post a Comment