முதிரை மரக்குற்றி யாருடையது?



அனுமதிப்பத்திரமின்றி முல்லைத்தீவில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பாரவூர்தியில் முதிரை மரக்குற்றிகளை ஏற்றிச்சென்ற ஒருவரை நேற்று சாவகச்சேரி பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சாவகச்சேரி போதைப்பொருள் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில், நேற்று காலை மீசாலை பகுதியில் குறித்த பாரவூர்தியை மறித்து சோதனை செய்ய முயன்றபோது, சாரதி சுமார் 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான 43 முதிரை மரக்குற்றிகளுடன் வாகனத்தை கைவிட்டு தப்பிச் சென்றார். பின்னர் பொலிஸார் வாகனத்தை கைப்பற்றியதுடன், சாரதியையும் கைது செய்துள்ளனர்.

குறித்த வாகனம் பருத்தித்துறை நகர பிதா அவர்களுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படுகிறது. 

பருத்தித்துறை நகர சபையின் நகர பிதாவாக செயற்பட்டு வரும் அவர்மீது ஏற்கனவே பல்வேறு முறைகேடுகள் மற்றும் ஊழல் குறித்த விசாரணைகள் நடைபெற்று வருகிறது.

No comments