எதிர்கட்சி தலைவராக உதயநிதி ஸ்டாலின்!



திமுக சட்டமன்றக் கட்சியின் தலைவராகவும் எதிர்கட்சி தலைவராகவும்  உதயநிதி ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், தவெக தனி பெரும் கட்சியாக 108 இடங்களை வென்றிருந்தும் ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை இல்லாமல் இருந்தது. இதன் காரணமாக திமுக கூட்டணி கட்சிகளின் ஆதரவை தவெக கோரியது. இதனையடுத்து திமுக கூட்டணியில் இருந்து வெளியேறி காங்கிரஸ் முதல் கட்சியாக தவெகவுடன் கூட்டணி வைத்தது.

அதேசமயம், திமுக கூட்டணியில் இருக்கும் சிபிஐ, சிபிஎம், விசிக மற்றும் ஐ.யூ.எம்.எல். ஆகியவை வெளியில் இருந்து ஆதரவு தெரிவித்துள்ளன. இதன் மூலம், தவெகவுக்கு பெரும்பான்மை கிடைத்தது. இதனையடுத்து இன்று காலை நேரு உள்விளையாட்டு அரங்கில், தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் தவெக தலைவர் விஜய்யை முதலமைச்சராக பதவி பிரமாணம் செய்துவைத்தார்.

No comments