அழுத்தப் பிரதேசம் மேலும் நீடிப்பு!
இலங்கைக்கு வடகிழக்கே அமைந்துள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் மேலும் நீடிப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
நடத்தை, வளர்ச்சி மற்றும் நகரும் பாதை குறித்து திணைக்களம் தொடர்ந்து அவதானித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.
இந்த தாக்கம் காரணமாக, மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வட மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுவதுடன், வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.
சில இடங்களில் 75 மில்லிமீட்டர் அளவிலான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.

Post a Comment