மகிந்த தரப்பிற்கு எதிராக சந்திரிகா களமிறக்கம்!
நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத் திட்டத்தில் பாரிய ஊழல நடைபெற்றுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ராஜபக்சர்கள் மீது பகிரங்க குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார்.
இலங்கையின் மின்சக்தி நெருக்கடி மற்றும் நுரச்சோலை அனல்மின் நிலைய நிர்மாணம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க கருத்து வெளியிடுகையில் தனது ஆட்சிக் காலத்தில் திட்டமிடப்பட்ட நுரச்சோலை மின் உற்பத்தி நிலையத் திட்டத்தை, தனக்குப் பின் வந்த அரசாங்கம் எவ்வாறு கையாண்டது என்பது குறித்து அவர் விவரித்துள்ளார்.
தனது ஆட்சிக் காலத்தில் 280 மில்லியன் டொலர் மதிப்பீட்டில் கையெழுத்திடப்பட்ட திட்டம், பின்னர் வந்த ஆட்சியாளர்களால் முறைகேடாக 520 மில்லியன் டொலராக உயர்த்தப்பட்டதாக சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
திட்டத்தின் மொத்த மதிப்பில் 50 சதவீதத்தை தரகுக் கட்டணமாக ஒரு தரப்பினர் கோரியதாகவும், சீன நிறுவனம் அதற்கு இணங்காததால் அந்த நிறுவனத்தை வெளியேற்றிவிட்டு, அனுபவமற்ற ஒரு புதிய நிறுவனத்திடம் அதிக விலைக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டதாகவும் அவர் சாடியுள்ளார்.
அன்று நடந்த இத்தகைய பாரிய நிதி மோசடிகளே இன்று நாடு எதிர்கொள்ளும் தொடர் மின்வெட்டு மற்றும் பொருளாதாரச் சரிவுக்கு முக்கியக் காரணம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நேற்றைய தினம் விமான கொள்வனவு ஊழல் தொடர்பில் மகிந்த கைதாகலாமென்ற எதிர்பார்ப்பில் கொழும்பில் ஆதரவாளர்கள் திரண்டிருந்த நிலையில் சந்திரிகா தனது கருத்தை வெளியிட்டுள்ளார். .

Post a Comment