பொலிஸாருக்கு இந்திய அரசாங்கத்தினால் நன்கொடையாக வழங்கப்பட்ட 134 கெப் ரக வாகனங்கள்


இலங்கை பொலிஸ் பயன்பாட்டிற்காக, இந்திய - இலங்கை நட்புறவு திட்டத்தின் கீழ் இந்திய அரசாங்கத்தினால் நன்கொடையாக வழங்கப்பட்ட 134 கெப் (Cabs) ரக வாகனங்களை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்கும் நிகழ்வு இன்றைய தினம் திங்கட்கிழமை ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு , வாகனங்களை பொறுப்பேற்ற ஜனாதிபதி, இந்திய - இலங்கை நட்புறவு திட்டத்தின் கீழ் இந்தியா இலங்கைக்கு வழங்கி வரும் தொடர்ச்சியான ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதுடன், இந்த பணிகளுக்காக அர்ப்பணிப்புடன் செயலாற்றும் இந்திய உயர்ஸ்தானிகர் உள்ளிட்ட பணியாளர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார் 

No comments