கிளிநொச்சியில் மோட்டார் சைக்கிள் விபத்து - பாடசாலையில் பிள்ளையை ஏற்ற சென்ற தாய் உயிரிழப்பு
கிளிநொச்சியில் மோட்டார் சைக்கிளை வேகமாக ஓடி சாகசம் செய்த இளைஞனின் மோட்டார் சைக்கிள் மோதி பாடசாலைக்கு பிள்ளையை ஏற்ற சென்ற தாய் உயிரிழந்துள்ளார்.
உருத்திரபுரம் பகுதியில் இடம்பெற்ற குறித்த விபத்தில் அப்பகுதியை சேர்ந்த தாய் உயிரிழந்துள்ளார்
உருத்திபுரம் - கரடி போக்கு சந்திக்கு இடையில் வேகமாக மோட்டார் சைக்கிள் ஓடி இளைஞர்கள் குழு ஒன்று சாகசம் செய்துள்ளது. அதனால் வீதியில் பயணித்தவர்கள் அச்சத்துடன் பயணித்துள்ளார்கள்,
இந்நிலையில் பாடசாலையில் தனது பிள்ளையை ஏற்ற மோட்டார் சைக்கிளில் பயணித்த தாய் மீது வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து மோதியதில் தாய் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் மற்றைய மோட்டார் சைக்கிள் ஓட்டியான இளைஞன் படுகாயமடைந்த நிலையில் , கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Post a Comment