அமெரிக்க-ஈரான் அமைதிப் பேச்சுவார்த்தையின் அடுத்த சுற்று இன்னும் முடிவு செய்யப்படவில்லை


இஸ்ரேலுடன் எந்தவொரு நேரடிப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு முன்பும் போர் நிறுத்தம் அமல்படுத்தப்பட வேண்டும் என்று லெபனான் அதிபர் ஜோசப் அவுன்

வியாழக்கிழமை தெரிவித்தார்.

இஸ்ரேலிடம் லெபனான் கோரியுள்ள போர் நிறுத்தம், இரு நாடுகளுக்கும் இடையிலான நேரடிப் பேச்சுவார்த்தைகளுக்கான இயற்கையான தொடக்கப் புள்ளியாகும் என்று அவுன் ஒரு அறிக்கையில் கூறியதாக ஏஎஃப்பி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் மற்றும் லெபனான் தலைவர்கள் இன்று வியாழக்கிழமை பிற்பகுதியில் பேசுவார்கள் நடத்துவார்கள் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் கூறியதைத் தொடர்ந்து அவுனின் கருத்துக்கள் வெளியாகின.

பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு லெபனான் அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்துவார் என இஸ்ரேலிய அதிகாரி ஒருவர் முன்னதாக உறுதிப்படுத்தினார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை பல ஆண்டுகளாக முழுமையாக முறிந்துபோன நிலையில், பிரதமர் லெபனான் அதிபருடன் முதல் முறையாகப் பேசவுள்ளார் என்று நெதன்யாகுவின் லிகுட் கட்சியைச் சேர்ந்தவரும், இஸ்ரேலின் புத்தாக்கம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சருமான கிலா கம்லியல் இஸ்ரேலிய இராணுவ வானொலியிடம் தெரிவித்தார்.

இந்த நடவடிக்கை இறுதியில் லெபனான் நாட்டிற்குச் செழிப்பையும் வளத்தையும் அளிக்கும் என்று நம்புகிறேன் என்று அவர் கூறினார்.

கடந்த காலத்தைப் போல வெறும் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளிலிருந்து மாறி, இஸ்ரேல் நாட்டு குடிமக்களுக்குத் தீங்கு விளைவிக்க முற்படுபவர்களிடமிருந்து வரக்கூடிய எந்தவொரு சாத்தியமான அச்சுறுத்தலையும் அடியோடு ஒழிக்கும் வகையில், நாங்கள் ஒவ்வொரு மட்டத்திலும் வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம் என்று ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா தீவிரவாதக் குழுவைக் குறிப்பிட்டு கம்லியல் மேலும் கூறினார்.

No comments