ஈரான் போரை இரண்டு அல்லது மூன்று வாரங்களில் முடிவுக்கு கொண்டு வரமுடியும் - டிரம்ப்


இரண்டு அல்லது மூன்று வாரங்களில் அமெரிக்கா ஈரானிலிருந்து வெளியேறிவிடும் என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.

வெள்ளை மாளிகையில் பேசிய அமெரிக்க அதிபர், பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணாமலேயே ஈரான் மீதான போரை அமெரிக்காவால் முடிவுக்குக் கொண்டுவர முடியும் என்று கூறியுள்ளார்.

தனக்கு ஒரே ஒரு குறிக்கோள் இருந்ததாகவும், அது ஈரானிடம் அணு ஆயுதங்கள் இருக்கக்கூடாது என்பதுதான் என்றும், அது அடையப்பட்டுவிட்டதாகவும் அவர் கூறுகிறார்.

 ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கையில் தனது நோக்கம் “அணு ஆயுதம் ஏந்தாமல் இருப்பது”தான் என்றும் டிரம்ப் கூறினார்.

அந்த இலக்கு அடையப்பட்டுவிட்டது. அவர்களிடம் அணு ஆயுதங்கள் இல்லை.

ஆட்சி மாற்றம் எங்கள் நோக்கமாக இருக்கவில்லை என டிரம்ப் கூறினார்.

ஈரானில் ஆட்சி ஏற்கனவே மாற்றப்பட்டுவிட்டது என்றும் ஜனாதிபதி தனது உரையில் முன்னதாகக் கூறியிருந்தார்.

அமெரிக்க-இஸ்ரேலிய தீவிரத் தாக்குதல்களுக்குப் பின்னர் ஈரான் மீண்டும் கட்டியெழுப்ப 15 முதல் 20 ஆண்டுகள் ஆகும் என்று டிரம்ப் கூறுகிறார்.

அவர்களிடம் உள்ள அனைத்தையும் நாங்கள் தகர்க்க விரும்புகிறோம்.

அவர்களிடம் கடற்படை இல்லை. அவர்களிடம் இராணுவம் இல்லை. அவர்களிடம் விமானப்படை இல்லை. அவர்களிடம் தொலைத்தொடர்பு வசதி இல்லை. அவர்களிடம் விமான எதிர்ப்பு அமைப்புகள் இல்லை. அவர்களிடம் தலைவர்கள் இல்லை என்று கூறினார்.

அவர்கள் பேச்சுவார்த்தைக்கு வந்தால் அது நல்லது.  அவர்கள் வந்தாலும் சரி, வராவிட்டாலும் சரி, அது ஒரு பொருட்டல்ல என்று டிரம்ப் மேலும் கூறினார்.

No comments