போயிங், டெஸ்லா, மெட்டா, கூகுள் மற்றும் ஆப்பிள் உள்ளிட்ட நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்தப்போவதாக ஈரான் எச்சரிக்கை


அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களைத் தாக்கப்போவதாக ஈரான் அச்சுறுத்தல், மக்களை வெளியேறுமாறு அழைப்பு விடுத்துள்ளது.

அப்பகுதியில் செயல்படும் அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களைத் தாக்கப்போவதாக ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை (IRGC) எச்சரித்துள்ளதுடன், ஊழியர்களையும் அருகிலுள்ள மக்களையும் உடனடியாக வெளியேறுமாறு வலியுறுத்தியுள்ளது.

பயங்கரவாத இலக்குகளை வடிவமைப்பதிலும் கண்காணிப்பதிலும் அமெரிக்க மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு நிறுவனங்களே முக்கியப் பங்கு வகிப்பதால்... இனிமேல், இந்த முக்கிய நிறுவனங்களே எங்களின் முறையான இலக்குகளாக இருக்கும் என்று ஈரானின் தஸ்னிம் செய்தி நிறுவனம் வெளியிட்ட ஓர் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

குறிவைத்துத் தாக்கும் படுகொலைகளில்  மேலும் ஈரானியத் தலைவர்கள் கொல்லப்பட்டால், நாளை உள்ளூர் நேரப்படி இரவு 8 மணி முதல் போயிங், டெஸ்லா, மெட்டா, கூகுள் மற்றும் ஆப்பிள் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் குறிவைக்கப்படும் என ஐ.ஆர்.ஜி.சி. தெரிவித்துள்ளது.

No comments