மட்டக்களப்பில் அன்னை பூபதிக்கான திதிக் கடமைகள்


தியாக தீபம் அன்னை பூபதியின் 38ஆவது நினைவேந்தல் நிகழ்வுகள் வடக்கு கிழக்கு எங்கெங்கும் பெரும் நினைவெழுச்சியுடன் நடைபெற்றது.

பிரதான நிகழ்வு மட்டக்களப்பு கல்லடி நாவலடியில் அமைந்துள்ள அன்னை பூபதியின் நினைவிடத்தில் நடைபெற்றது.

இதன்போது அன்னை பூபதிக்கான திதிக் கடமைகள் குடும்ப உறவுகளால் முன்னெடுக்கப்பட்டதுடன், அதனைத் தொடர்ந்து அன்னை பூபதிக்கான அஞ்சலி நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டன.

அன்னையின் இளைய மகள் ராதாவால்  ஈகைச் சுடர் ஏற்றப்பட்டதுடன், அன்னையின் மூத்தமகள் சாந்தியால் மலர்மாலை அணிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து வருகை தந்தவர்களினால் சுடரேற்றி, மலர்தூவி நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது






No comments