வேலணையில் எலும்புக்கூட்டு தொகுதி மீட்பு!

 






வேலணை அல்லைப்பிட்டி பகுதி பற்றைக் காணி ஒன்றில் இனந்தெரியாத நபர் ஒருவரின் எலும்புக் கூடுகள் மிகவும் உக்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

இதனிடையே மீட்கப்பட்ட எலும்புக் கூடு தொடர்பில் சட்ட வைத்திய அதிகாரியின் மருத்துவ உடற்கூற்று அறிக்கையிக் பின்னரே உறுதியாக கூறமுடியும் என காவல்துறை தெரிவித்துள்ளது.

முன்பதாக பொதுமக்கள் பயன்பாட்டில் இல்லாத பற்றைக் காணி ஒன்றில் எலும்புக் கூடுகள் இருப்பதாக காவல்துறையினர் அவசர தொலைபேசி இலக்கத்துக்கு பொதுமகன் ஒருவரால் தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நடவடிக்கையில் இறங்கிய காவல்துறையினர் எலும்புக் கூடுகளை அடையாளம் கண்டதாகவும், அதனடிப்படையில் எலும்புக்கூட்டுத்தொகுதி , நீதிபதிபதி முன்னிலையில் மீட்கப்பட்டு மருத்துவ பரிசோதனைக்குட்படுத்தப்படவுள்ளது.

இதனிடையே  எலும்புக் கூடு எரிந்த நிலையில் தோற்றமளிப்பதாக மற்றொரு தகவல் தெரிவிக்கப்படுகின்றது.

முன்னதாக இலங்கை கடற்படையின் கட்டுப்பாட்டின் கீழ் தீவகப்பகுதி இருந்திருந்த காலப்பகுதியில் வணபிதா ஜிம்பிறவுண் அடிகளார் உட்பட நூற்றுக்கணக்கானவர்கள் காணாமல் ஆக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



No comments