ஜெர்மனி-டேனிஷ் எல்லையில் புதிய திமிங்கலம் காணப்பட்டது
வடக்கு ஜெர்மன் நகரமான ஃப்ளென்ஸ்பர்க்கிற்கு அருகில் , ஜெர்மனியை டென்மார்க்கிலிருந்து பிரிக்கும் நீர்வழியான ஃப்ளென்ஸ்பர்க் விரிகுடாவைச் சுற்றியுள்ள குறுகிய நீர்வழியில் ஒரு வெள்ளை பெலுகா திமிங்கலம் காணப்பட்டுள்ளது.
வெள்ளைத் திமிங்கலம் கடந்த மாதம் அரோசுண்ட் அருகே முதன்முதலில் காணப்பட்டது. அதன் பின்னர் அது, ஆல்ஸ் தீவைக் கடந்து தெற்கே பயணித்து, ஜெர்மன் மொழியில் ஃபிளென்ஸ்பர்கர் ஃபோர்டே அல்லது டேனிஷ் மொழியில் ஃபிளென்ஸ்போர்க் ஃபியார்ட் என்று அழைக்கப்படும் கடற்பகுதியில் நுழைந்துள்ளது.
பெலுகா திமிங்கலங்கள் நட்பான, சமூக விலங்குகள் என்றும், அவை பெரும்பாலும் கூட்டமாகப் பயணம் செய்யும் என்றும் கூறப்படுகிறது. விசில், கீச்சிடும் ஒலிகள் மற்றும் சொடுக்கு ஒலிகள் அடங்கிய ஒரு மொழி மூலம் பலதரப்பட்ட தகவல்தொடர்பு முறைகளைப் பயன்படுத்துவதால், அவை கடலின் கேனரிப் பறவைகள் என்ற புனைப்பெயரைப் பெற்றுள்ளன.
ஹெர்ரிங் மீன், சால்மன் மீன், கணவாய் மற்றும் ஓட்டு வகையான நண்டு, இரால், சிங்கஇரால் போன்றவற்றை உணவாகக் உட்கொள்ளும் பெலுகா திமிங்கலங்கள், ஆறு மீட்டர் நீளம் வரை வளரக்கூடியவை மற்றும் ஒரு டன்னுக்கும் அதிகமான எடை கொண்டவை.
அவை பொதுவாக கிரீன்லாந்து மற்றும் நார்வே போன்ற துணை-ஆர்க்டிக் பிராந்தியங்களில் காணப்படுகின்றன, ஆனால் தெற்கு டென்மார்க்கில் ஒரு பெலுகா திமிங்கலம் காணப்படுவது இது முதல் முறையல்ல; இதற்கு முன்னர் 1903, 1964, 1980கள் மற்றும் 2012 ஆகிய ஆண்டுகளில் அவை காணப்பட்டதாக வரலாற்றுப் பதிவுகள் உள்ளன.
கடந்த ஒரு மாதமாக யேர்மனியின் வடகிழக்குக் கடற்கரையில் மீண்டும் மீண்டும் கரை ஒதுங்கிய கூன்முதுகுத் திமிங்கிலம் அதை மீட்ட முடியதா நிலையில் அதனை நிம்மதியாக இறப்பதற்காக விடப்பட உள்ளது.

Post a Comment