பளையில் புலிகள்:கொழும்பில் சிறை!
பளையில் விடுதலைப் புலிகள் முகாம் அமைக்கப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்கள் மூலம் பொய்த் தகவல்கள், படங்களை பரப்பியதற்காக, கொழும்பு- பெல்லன்விலாவில் 46 வயதான நபர் ஒருவர் பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று இரவு (18) கைது செய்யப்பட்டுள்ளார்.
கிளிநொச்சியின் வன்னேரிக்குளம் கண்ணகிபுரம் பகுதியில் சட்டவிரோதமாக காட்டினையழித்து ஆடைத்தொழிற்சாலையொன்றை அமைத்திருந்த நபர் வனவளத்திணைக்களம் மற்றும் காவல்துறை இணைந்து முன்னெடுத்த நடவடிக்கை மூலம் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவருடன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகுமாரின் சார்பு உள்ளுராட்சி மன்ற பிரதிநிதிகளும் கைதாகியிருந்தனர்.
ஏற்கனவே சட்டவிரோத நிதிக்கொடுக்கல் வாங்கல் நிறுவனங்களினை நடாத்திவருகின்றமை தொடர்பில் கிளிநொச்சி நீதிமன்றில் வழக்குகளை எதிர்கொண்டுள்ள நபரே கைதாகியிருந்தார்.
இந்நிலையில் வன்னேரிக்குளத்தில் நடாத்தப்பட்ட ஆடைத்தொழிற்சாலையினையே புலிகளின் பயிற்சி முகாமென தென்னிலங்கையில் பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment