முகமாலையில் உடலம் மீட்பு!
கிளிநொச்சி முகமாலை பொந்தர் குடியிருப்பு பகுதியில் அடி காயங்களுடன் முதியவர் ஒருவரின் சடலம் இனங்காணப்பட்டுள்ளது
முகமால வடக்கு பொந்தர் குடியிருப்பு பகுதியில் இன்று ஆடு மேய்க்க சென்ற ஒருவர் ஆட்கள் நடமாட்டமற்ற காணியொன்றுக்குள் சடலம் ஒன்று கிடப்பதை அவதானித்த நிலையில் அப்பகுதி பொதுமக்களால் காவல்துறைக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
சடலமாக மீட்கப்பட்டவர் முகமாலை வடக்கு பகுதியைச் சேர்ந்த 71 வயதுடைய இளையவன் நல்லதம்பி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
தகவலையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த இலங்கை காவல்துறையினர் சடலத்தை மீட்டுள்ளனர்.
உடலில் அடி காயங்கள் காணப்படுவதால், மரணம் தொடர்பில் பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளது.

Post a Comment