தேசிய மக்கள் சக்தி எண்ணெய் தேய்த்தது?



தேசிய மக்கள் சக்தி அரசு மீது எதிர்கட்சிகள் ஊழல் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துவரும் நிலையில் அநுர குமார திசாநாயக்க, இன்று (15) முற்பகல் அஸ்கிரி மகா விகாரைக்குச் சென்று அஸ்கிரிய   மகாநாயக்க தேரரைச்  சந்தித்து, உரையாடியுள்ளார்.

அதன்போது மகாநாயக்க தேரர் உள்ளிட்ட மகாசங்கத்தினர்  னாதிபதி உள்ளிட்ட குழுவினருக்குத் தனது ஆசீர்வாதங்களை வழங்கியுள்ளனர்.

இதனிடையே சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டின் பாரம்பரிய சம்பிரதாயங்களுக்கு அமைவாக, 2026ஆம் ஆண்டுக்கான அரச எண்ணெய் தேய்க்கும் விழா அநுர குமார திசாநாயக்கவின் பங்கேற்புடன் இன்று (15) காலை கண்டியில் நடைபெற்றது.

தலதா மாளிகை மற்றும் மகா நாத தேவாலய வளாகத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றிருந்தது. மகா நாயக்க தேரர்களின் வழிகாட்டலுடன், சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சு மற்றும் ஆயுர்வேத திணைக்களம் என்பன இணைந்து அதற்கான ஏற்பாடு செய்திருந்ததாக கூறப்படுகின்றது.


No comments