இலங்கை கூலிப்படை உக்ரைனில் மரணம்!
உக்ரைனில் கூலிப்படையாக பணியாற்றிய இலங்கை இராணுவச்சிப்பாய் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். இலங்கையைச் சேர்ந்த லஹிரு காவிந்த ஹதுருசிங்க, என்ற கூலிப்படையினரே உக்ரைனில் உள்ள போர்க்களத்தில் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை இராணுவத்தின் இரண்டாவது கமாண்டோ படைப்பிரிவில் பணியாற்றியபோது, அப்பிரிவிற்குத் தெரிவிக்காமல் சேவையிலிருந்து விலகிய பின்னர் உக்ரைன் போர் களத்தில் உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக உக்ரேனிய ஜனாதிபதி அவருக்கு வீர சிப்பாய் பதக்கம் வழங்கிய பின்னர், அவர் உக்ரேனிய இராணுவத்தில் படைப்பிரிவொன்றில் பணியாற்றியதாக கூறப்படுகின்றது.
அதேவேளை உடலம் எடுத்து வரப்படாத போதும் இறுதிச் சடங்கு, அவரது தாய்நாடான இலங்கையில் பௌத்த மரபுகளின்படி நடைபெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2023ஆம் ஆண்டு டிசம்பர் ஐந்தாம் திகதி உக்ரைனில் ஏனைய மூன்று சிங்கள கூலிப்படை சிப்பாய்கள் போரில் கொல்லப்பட்டிருந்தனர்.
சம்பவத்தின் போது காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த லஹிரு கவிந்த, மீண்டும் போர்க்களத்திற்குத் திரும்பிய நிலையில் ரஸ்ய படைகளால் கொல்லப்பட்டுள்ளார்.

Post a Comment