பிள்ளையான் வைத்தியசாலையில்!
பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்பில் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரான் பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சுகயீனம் காரணமாக நேற்று (15) பிற்பகல் பிள்ளையான் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக சிறைச்சாலை ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், அவர் தற்போது மருத்துவர்களின் கண்காணிப்பில் இருப்பதாகவும் சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
கிழக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் பிள்ளையான் கடந்த வருடம் ஏப்ரல் 08ஆம் திகதி மட்டக்களப்பில் வைத்து குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைதுசெய்யப்பட்டு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment