பாசறைப்பாணருக்கு யாழில்.புகழ் வணக்கம்
பாசறைப் பாணர் தேனிசை செல்லப்பா அவர்களின் நினைவு வணக்க நிகழ்வு போராளிகள் நலன்புரிச் சங்கத்தினரின் ஏற்பாட்டில் இன்றையதினம் வியாழக்கிழமை யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தந்தை செல்வா மண்டபத்தில் எழுச்சிபூர்வமாக இடம்பெற்றது.
மாவீரரின் தந்தையால் பொதுச்சுடர் ஏற்றப்பட்டு, பாசறைப் பாணர் தேனிசை செல்லப்பாவின் திருவுருவ படத்திற்கு மதத் தலைவர்கள் மலர்மாலை அணிவிக்கப்பட்டது. தொடர்ந்து நினைவுச் சுடர்களும் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தும் நிகழ்வும் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றது.
பாசறைப் பாணர் தேனிசை செல்லப்பா அவர்களின் நினைவாக கவிஞர் மாணிக்கம் ஜெகன் அவர்களின் வரிகளில் விமலின் இசையமைப்பில் கேதீஸ்வரனால் பாடப்பட்ட பாடல் ஒன்றும் வெளியிட்டு வைக்கப்பட்டது.
தொடர்ந்து மதத் தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர், மற்றும் தமிழ்த்தேசிய செயற்பாட்டாளர்களது நினைவுரைகளும் இடம்பெற்றன.





Post a Comment