டிரம்ப் நிலவுக்குச் செல்லத் திட்டமிட்டுள்ளார்


நிலவை வெற்றிகரமாகச் சுற்றிவந்து பூமிக்குத் திரும்பிய ஆர்டெமிஸ் II விண்வெளிப் பயணத்தின் விண்வெளி வீரர்களுக்கும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கும் இடையே ஒரு சந்திப்பு நடைபெற்றுள்ளது.

இந்தச் சந்திப்பு நேற்று வெள்ளை மாளிகையில் நடந்ததாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவித்தன.

அமெரிக்க ஜனாதிபதி, ஆர்டெமிஸ் II திட்டத்தில் இருந்த விண்வெளி வீரர்களுக்கு இரவு விருந்தும் அளித்தார்.

இதுபோன்ற ஒரு சந்திர பயணத்தில் தானும் பங்கேற்கலாமா என ஜனாதிபதி டிரம்ப் கேட்டதாகவும், நாசா நிர்வாகிகள் அதற்கு ஒப்புக்கொண்டதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

No comments