யாழில். கூரிய ஆயுதங்களுடன் மூவர் கைது


யாழ்ப்பாணத்தில் நபர் ஒருவர் மீது தாக்குதல் நடாத்துவதற்காக கூரிய ஆயுதங்களுடன் தயார் நிலையில் இருந்த வன்முறை கும்பல் ஒன்றை சேர்ந்த மூவரை சுன்னாகம் பொலிஸார் கைது செய்துள்ளனர். 

புன்னாலைகட்டுவான் பகுதியில் வன்முறை கும்பல் ஒன்றை சேர்ந்த மூவர் கூரிய ஆயுதங்களுடன் தாக்குதலுக்கு தயாராக இருப்பதாக சுன்னாகம் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் , சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மூவரையும் கைது செய்தனர் 

கைது செய்யப்பட்ட மூவரிடம் இருந்தும் மூன்று வாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. 

கைது செய்யப்பட்டவர்களை சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 

No comments