நெதன்யாகுவின் மாயைக்கு அமெரிக்கப் படைவீரர்கள் பலியாகுவார்கள்: ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர்
பிராந்தியத்தில் அமெரிக்காவின் அனைத்து நகர்வுகளையும், குறிப்பாகப் படைக் குவிப்புகளையும் தெஹ்ரான் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது என்று ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் தெரிவித்துள்ளார்.
நெதன்யாகுவின் மாயைக்கு அமெரிக்கப் படைவீரர்கள் பலியாகுவார்கள் என்று ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் காலிபாஃப் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்ட ஒரு பதிவில் கூறினார். எங்கள் நிலத்தைப் பாதுகாப்பதற்கான எங்கள் உறுதியைச் சோதிக்காதீர்கள்.
முன்னதாக, 82வது வான்வழிப் படைப் பிரிவைச் சேர்ந்த 1,000க்கும் மேற்பட்ட வீரர்கள் மத்திய கிழக்குக்கு அனுப்பப்படவிருப்பதாகவும், அத்துடன் இரண்டு கடற்படைப் பிரிவுகள் அனுப்பப்பட்டு அப்பகுதியில் சுமார் 5,000 கடற்படை வீரர்களும் ஆயிரக்கணக்கான மாலுமிகளும் கூடுதலாக இணைக்கப்படுவார்கள் என்றும் அசோசியேட்டட் பிரஸ் செய்தி வெளியிட்டிருந்தது.
இந்நிலையில் இவரது கருத்து வெளிவந்துள்ளது.

Post a Comment