சாலே வைத்தியசாலையில் அபாய கட்டத்திலா?



ஈஸ்டர் குண்டுதாக்குதல் திட்டவகுப்பாளரென்ற குற்றச்சாட்டில் கைதாகி தடுப்புக் காவலில் உள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஸ் சலே, திடீர் சுகயீனம் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவர் தற்போது குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பொறுப்பில் தடுத்துவைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார்.

இதனிடையே அவரது உடல்நிலை குறித்து விசாரிப்பதற்காகக் குடும்ப உறுப்பினர்கள் அனுமதி கோரியிருந்த போதிலும், அதற்கு அனுமதி வழங்கப்படவில்லை எனக் குறிப்பிடப்படுகிறது.

அவரது உடல்நிலை குறித்து அறிவிக்கப்பட்டதன் பின்னர், நீதவான் அவரைப் பார்வையிட்டதுடன், பின்னர் வைத்தியரிடம் ஆற்றுப்படுத்தியுள்ளார்.

வைத்திய ஆலோசனையின்படி அவர் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. 

2019ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், அவரிடம் பாதுகாப்புத் தரப்பினர் தொடர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

தடுப்புக் காவல்: தற்போது அவர் 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்யும் உத்தரவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments