ஆட்சி மாற்றம் சாத்தியமில்லை!

 



ஜக்கிய மக்கள் சக்தி ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்ட மாநாடொன்றில் யாழ்.பல்கலைக்கழக மாணவர்களில் ஒரு சாரார் தற்போதைய தேசிய மக்கள் சக்திக்கே மாணவர்கள் ஆதரவென பொதுவெளியில் அறிவித்துள்ளனர்.

தற்போதைய பொருளாதார நெருக்கடி சூழலிலும் மக்கள் ஆதரவை தேசிய மக்கள் சக்தி தக்கவைத்துவருகின்றது.

இதனிடையே நாட்டில் ஆட்சி மாற்றத்தை எதிர்பார்த்து எதிர்க்கட்சிகள் சர்வதேச மோதல்களைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்த முனைகின்றன. மீண்டும் நாடு அவர்கள் கைக்குச் சென்றால் ஏற்படக்கூடிய விபரீதங்களை மக்கள் நன்கு அறிவார்கள் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். 

"சர்வதேச யுத்தச் சூழல் காரணமாக நாடு சவாலான பொருளாதார நிலைமையை எதிர்நோக்கியுள்ள போதிலும், மக்களுக்குத் தேவையான அடிப்படை அபிவிருத்திப் பணிகளை நிறுத்தவில்லையென தெரிவித்துள்ள அமைச்சர் 'டிட்வா'   புயல் காரணமாக நாடளாவிய ரீதியில் சேதமடைந்த வீதிகளைப் புனரமைக்கும் பாரிய வேலைத்திட்டம் புதன்கிழமை (25) அன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

முந்தைய ஆட்சிக் காலங்களைப் போலன்றி, நாங்கள் வெற்று அடிக்கல்களை நாட்டுவதில்லை. தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த வீதிப் பணிகள் அடுத்த 6 மாதங்களுக்குள் முழுமையாக நிறைவடையுமெனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். 


No comments