அருச்சுனாவிற்கு மேலுமொரு வழக்கு?
சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் மீது மலையக சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் சிலர் காவல்துறை அதிபர் மற்றும் குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளனர்.
சமீபத்தில் அர்ச்சுனா இராமநாதன் வெளியிட்ட பொதுக் கருத்துக்கள் மலையகத் தமிழர் சமூகத்தை இழிவுபடுத்தும் வகையிலும், பிரதேசவாதத்தையும் சமூக அமைதியையும் சீர்குலைக்கும் விதத்திலும், வெறுப்புப் பேச்சாக அமைந்துள்ளதாக முறைப்பாட்டில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
அதுகுறித்து உடனடி விசாரணை மேற்கொண்டு, சட்டப்படி தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளிடம் கோரப்பட்டுள்ளது.
இந்த முறைப்பாட்டை ஜீவரத்தினம் சுரேஸ் அந்தனி ஜெசுதாசன் , செல்வராஜா ராஜசேகர் அழகர் செல்வராஜா (சுய சக்தி நிறுவனம்), மற்றும் கே. யோகா சுஜி போன்ற சமூக செயற்பாட்டாளர்களும் இணைந்து சமர்ப்பித்துள்ளனர்.
இதனிடையே அர்ச்சுனா இராமநாதன் கருத்துக்கெதிராக யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

Post a Comment