நீங்கள் உங்களுடனே பேச்சுவார்த்தை நடத்துகிறீகளோ - ஈரான்


அமெரிக்கா தன்னுடைய போரில் தோற்று கொண்டிருக்கிறது. அதனால், தன்னை தற்காத்து கொள்வதற்காக அமெரிக்கா தன்னிடமே பேச்சுவார்த்தை நடத்தி கொண்டிருக்கிறது என ஈரான் இராணுவத்தின் ஒருங்கிணைந்த படைக்கான செய்தி தொடர்பாளர் இப்ராகிம் ஜல்பகாரி இன்று செய்தியாளர்கள் முன்னிலையில் கூறினார். 

போரை முடிவுக்கு கொண்டு வர பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் என டிரம்ப் கூறும் விடயங்களை அவர் மறுத்து உள்ளார்.

உங்களுடைய தோல்வியை போய் ஒப்பந்தம் என்று கூறாதீர்கள் என்றும் அவர் கூறினார். ஆனால், ஈரானில் உள்ள சரியான மக்களுடன் அமெரிக்கா பேசி வருகிறது என ஜனாதிபதி டிரம்ப், வெள்ளை மாளிகையில் நேற்று நிருபர்கள் முன்பு பேசும்போது கூறினார். அவர்கள் ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்த விருப்பத்துடன் இருக்கிறார்கள். எங்களுடன் பேசி வருகிறார்கள் என்றும் அப்போது கூறினார்.

No comments