ஈரான் மீது இதுவரை 15,000 குண்டுகளை வீசியுள்ளோம் - இஸ்ரேல்


ஈரான் மீது 15,000-க்கும் மேற்பட்ட குண்டுகளை வீசியதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

பிப்ரவரி 28 அன்று ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலியப் போர் தொடங்கியதிலிருந்து, ஈரானில் இஸ்ரேலிய இராணுவம் 15,000 வெடிமருந்துகள் என்ற வரம்பைத் தாண்டிவிட்டது என்று இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் கூறுகிறார்.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடந்த 12 நாள் மோதல்களை விட இது நான்கு மடங்கு அதிகம் என்று அமைச்சர் மேலும் கூறினார்.

இஸ்ரேலிய இராணுவத் தலைமைத் தளபதி இயால் ஜமீருடன் இணைந்து நடத்திய செய்தியாளர் சந்திப்பில், ஈரான் மற்றும் லெபனான் மீது தாக்குதல்கள் நடத்துவதற்கான புதிய இலக்குகளுக்கு டெல் அவிவ் ஒப்புதல் அளித்துள்ளதாக காட்ஸ் தெரிவித்தார்.

No comments