போருக்குப் பின்னர் லெபனானின் சில பகுதிகளை ஆக்கிரமிக்கப்படும் - இஸ்ரேல் அறிவிப்பு

போருக்குப் பின்னர் லெபனானின் சில பகுதிகளை ஆக்கிரமிக்க இஸ்ரேல் திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ்  தெரிவித்துள்ளார்.

ஹிஸ்புல்லாவுடனான தற்போதைய போர் முடிவடைந்த பின்னரும், தெற்கு லெபனானின் சில பகுதிகளை ஆக்கிரமிக்க இராணுவம் திட்டமிட்டுள்ளதாக இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் தெரிவித்துள்ளார்.

லெபனான் எல்லைக்குள் லிட்டானி நதி வரை நீட்டிக்கப்படும் ஒரு நிரந்தர பாதுகாப்பு மண்டலத்தை நிறுவுவதற்கான திட்டங்களை காட்ஸ் கோடிட்டுக் காட்டினார்.

இந்த நடவடிக்கையின் முடிவில், இஸ்ரேலிய இராணுவம் லெபனானுக்குள் ஒரு பாதுகாப்பு மண்டலத்தை நிலைநிறுத்திக் கொள்ளும். மேலும் லிட்டானி நதி வரையிலான முழுப் பகுதியின் மீதும் பாதுகாப்புக் கட்டுப்பாட்டைப் பராமரிக்கும் என்று அவர் கூறினார்.

இடம்பெயர்ந்த லெபனான் மக்கள் திரும்புவது தடுக்கப்படும் என்றும், காசா பாணியிலான இன அழிப்பு முறை செயல்படுத்தப்படும் என்றும் காட்ஸ் மேலும் கூறினார்.

காசாவில் உள்ள ரஃபா மற்றும் பெய்த் ஹனூன் மாதிரியைப் பின்பற்றி, லெபனானில் எல்லையை ஒட்டிய கிராமங்களில் உள்ள அனைத்து வீடுகளும் இடிக்கப்படும் என்று கூறினார்.

No comments