தாக்குதலில் ஈரானின் உயர்மட்டத் தளபதி மற்றும் குடும்பத்தினர் பலி - ஐ.ஆர்.ஜி.சி
ஈரானின் ஆயுதப் படைகளில் மேஜர் ஜெனரலாகவும், பொதுப் படைத் தலைமைத் தளபதியின் ஆலோசகராகவும் இருந்த ஜம்ஷித் இஷாகி கொல்லப்பட்டதை ஈரானின் ஐ.ஆர்.ஜி.சி. உறுதி செய்துள்ளது.
ஒரு தாக்குதலில் இஷாகியும் அவரது குடும்ப உறுப்பினர்கள் பலரும் கொல்லப்பட்டதாக ஐ.ஆர்.ஜி.சி. கூறியுள்ளது. ஆனால் அது குறித்த விவரங்களை அளிக்கவில்லை.
இஸ்ரேலியத் தாக்குதலில் கொல்லப்பட்ட ஐ.ஆர்.ஜி.சி கடற்படைத் தளபதி அட்மிரல் அலிரேசா டங்சிரியின் இறுதிச் சடங்கு திங்கட்கிழமை நடைபெறும் என்று ஈரானிய அரசு ஊடகங்கள் இன்று முன்னதாக அறிவித்தன.

Post a Comment