ஈரானின் 12 ஏவுகணைகள் மற்றும் 32 ஆளில்லா விமானங்களும் இடைமறிப்பு - ஐக்கிய அரபு அமீரகம்


ஈரானிலிருந்து ஏவப்பட்ட 12 ஏவுகணைகளையும், 32 ஆளில்லா விமானங்களையும் இடைமறித்ததாக ஐக்கிய அரபு அமீரகம் தெரிவித்துள்ளது.

ஈரானிலிருந்து இன்று ஏவப்பட்ட எட்டு பாலிஸ்டிக் ஏவுகணைகள், நான்கு குரூஸ் ஏவுகணைகள் மற்றும் 36 ஆளில்லா விமானங்களைத் தங்கள் விமானப்படை இடைமறித்ததாக ஐக்கிய அரபு அமீரகம் தெரிவித்துள்ளது.

ஈரானின் தாக்குதல்கள் தொடங்கியதிலிருந்து, ஐக்கிய அரபு அமீரகம் 433 பாலிஸ்டிக் ஏவுகணைகளையும், 19 குரூஸ் ஏவுகணைகளையும் மற்றும் 1,977 ஆளில்லா விமானங்களையும் இடைமறித்துள்ளது.

இந்தத் தாக்குதல்களில் ஆயுதப் படைகளைச் சேர்ந்த இரண்டு உறுப்பினர்களும், ஆயுதப் படைகளுடன் ஒப்பந்தம் செய்திருந்த மொராக்கோவைச் சேர்ந்த ஒரு குடிமகனும், பாகிஸ்தான், நேபாளம், பங்களாதேஷ், பாலஸ்தீனம் மற்றும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த எட்டு குடிமக்களும் கொல்லப்பட்டனர்.

இந்தத் தாக்குதல்களில் 188 பேர் காயமடைந்தனர்.

No comments