ஈராக்கின் முகமது அலா விமானப்படைத் தளம் மீது ராக்கெட்டுகள் தாக்கியுள்ளன


பாக்தாத் விமான நிலையத்திற்கு அருகிலுள்ள ஈராக்கின் முகமது அலா விமானப்படைத் தளம் மீது ராக்கெட்டுகள் தாக்கியுள்ளன.

பாக்தாத் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ள ஈராக்கின் முகமது அலா விமானப்படைத் தளம் மீது இன்று அதிகாலை ராக்கெட்டுகள் தாக்கியதில், ஒரு விமானம் அழிக்கப்பட்டதாகவும், ஆனால் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்றும் அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதிகாரிகள் சேதங்களை மதிப்பிட்டு வருவதாகவும், தாக்குதல் நடந்த மூலத்தைக் கண்டறிந்து வருவதாகவும் அமைச்சகம் மேலும் தெரிவித்தது.

முன்னதாக, பாக்தாத்தில் பலத்த வெடிச்சத்தங்கள் கேட்டதாகவும், ஈராக்கிய சிறப்புப் படைகளின் A32B போக்குவரத்து விமானத்தைத் தாக்கிய ராக்கெட்டுகளை வான் பாதுகாப்பு அமைப்பால் இடைமறிக்க இயலவில்லை என்றும், இதனால் அந்த விமானம் தீப்பிடித்து எரிந்ததாகவும் தெரியவந்துள்ளது.

No comments