இலவச சுற்றுலா விசா?



இலங்கையின் சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கும் நோக்கில், தேர்ந்தெடுக்கப்பட்ட 39 நாடுகளின் கடவுச்சீட்டுதாரர்களுக்கு கட்டணமின்றி 6 மாத காலத்திற்கு இலவச சுற்றுலா விசா வழங்கும் திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

முன்னதாக கடந்த ஆண்டினில் அமைச்சரவைக் கூட்டத்தில் அதற்கான ஆரம்பக்கட்ட அனுமதி வழங்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து, குடிவரவு மற்றும் குடியகல்வுச் சட்டத்தின் விதிகளுக்கு அமைவாக, சட்ட வரைஞரால் தயாரிக்கப்பட்ட அதற்கான வரைவு உத்தரவுகளை நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்காகச் சமர்ப்பிக்க அமைச்சரவை தீர்மானித்திருந்தது.

இந்நிலையில் பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை தனது இறுதி அங்கீகாரத்தை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.



No comments