அனுரவும் காணி பிடிக்கிறார்!



 தெற்கில்  எந்தவொரு அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும் தவறாமல் இடம்பெறும் ஒரு விடயம் முப்படைகளிற்கான காணி சுவீகரிப்பு நடவடிக்கையாகும்.

அவ்வகையில் கிளிநொச்சியின் இயக்கச்சி  பிரதேசத்தில் தனியார் காணிகளை இராணுவத்தின் பயன்பாட்டுக்காக சுவீகரிப்பதற்கான முயற்சிகள் எதிர்வரும் 02.ம் திகதி வியாழக்கிழமை நடைபெறவுள்ளது.

இலங்கை இராணுவம் முகாமிற்கென ஆக்கிரமித்துள்ள 25ஏக்கர் காணியினை நிரந்தரமாக இராணுவ முகாமிற்கு ஒதுக்கி வழங்க ஏதுவாக அளவீட்டுப்பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக இலங்கை நில அளவை திணைக்களம் அறிவித்துள்ளது. 

ஏற்கனவே கடற்படைக்கென தீவகத்திலும் மாதகலிலும் அண்மையில் நிலங்களை சுவீகரிக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சி மக்கள் போராட்டங்களால் தடுத்து நிறுத்தப்பட்டிருந்தது.

இதனிடையே இயக்கச்சி  பிரதேசத்தில் தனியார் காணிகளை இராணுவத்தின் பயன்பாட்டுக்காக சுவீகரிப்பதற்கெதிராக போராட இயக்கச்சி  பகுதியில் அனைவரும் ஒன்றுகூட சிவில் அமைப்புக்கள் அழைப்புவிடுத்துள்ளன.


No comments