ரஸ்யாவின் எரிபொருள் இலங்கைக்கு!



இலங்கைக்கு இன்று (26) காலை வருகைதந்த ரஸ்யாவின் எரிசக்தி பிரதி அமைச்சர் தலைமையிலான குழுவினருடன்  இடம்பெற்ற சந்திப்பையடுத்து இலங்கைக்கு சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளை வழங்க ரஸ்யா சம்மதித்துள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டத்தாபனத்தின் நிர்வாக பணிப்பாளர்  தெரிவித்துள்ளார்.

இதனிடையே போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான காலத்தை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நிர்ணயிக்க ஈரான் அனுமதிக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

போர்க்களத்தில் அமெரிக்காவின் தோல்விகளை மூடிமறைப்பதற்கான முன்மொழிவுகளை வழங்கி, பல்வேறு இராஜதந்திர வழிகள் மூலம் பேச்சுவார்த்தை முயற்சிகள் நடக்கின்றன.

2025ஆம் ஆண்டின் வசந்த காலத்திலும் குளிர்காலத்திலும் நடைபெற்ற இரண்டு சுற்றுப் பேச்சுவார்த்தைகளை, அவற்றுக்கிடையே உள்ள ஒற்றுமைகளைச் சுட்டிக்காட்டி, ஏமாற்றுப் பேச்சுவார்த்தைகள் என ஈரான் தெரிவித்துள்ளது.

ஈரானின் அனைத்து நிபந்தனைகளையும் ஏற்றுக்கொள்வதைப் பொறுத்தே போர் நிறுத்தம் அமையும் என்று ஈரான் தெரிவித்துள்ளது.

“அதற்கு முன்பு எந்தப் பேச்சுவார்த்தையும் நடைபெறாது,” “டிரம்ப் நினைக்கும் போது போர் முடிவுக்கு வராது, மாறாக அது முடிவுக்கு வர வேண்டும் என்று ஈரான் முடிவு செய்யும் போதுதான் வரும்,” என்றும் ஈரான் தெரிவித்துள்ளது.


No comments