சுரேஸ் சாலே 22ம் திகதி ஆஜர்!

 


ஈஸ்டர் ஞாயிறு குண்டுத்தாக்குதல் விசாரணை வழக்கில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் உள்ள முன்னாள் தேசிய புலனாய்வு சேவை தலைவரான ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் சுரேஸ் சாலேயை, எதிர்வரும் ஏப்ரல் 22-ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தடுத்து வைக்கப்பட்டுள்ள சுரேஸ் சாலே நோய்வாய்ப்பட்டு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் வழக்கு விசாரணை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று இடம்பெற்றிருந்தது.

அதன்போது, சாலேவுக்காக முன்னிலையான சட்டத்தரணிகள், விசாரணையை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் சானி அபேசேகரவிடமிருந்து விடுத்து வேறு ஒருவரிடம் ஒப்படைக்குமாறு கோரியிருந்தனர்.

எனினும்  ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடங்கியதில் இருந்தே குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் சானி அபேசேகர விசாரணையை நடத்தி வருவதால், அவரை விசாரணையிலிருந்து நீக்குவதற்கான உத்தரவு பெரும் சிக்கலாக அமையும் என்று சுட்டிக்காட்டி, அத்தகைய உத்தரவைப் பிறப்பிக்க நீதிமன்று மறுத்துள்ளது.

அதனைதொடர்ந்து, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்தில் சாட்சியங்களை முன்வைத்தபோது,  நீர்கொழும்பில் உள்ள வழிபாட்டுத் தலங்களைக் காண்பிப்பதற்காகப் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும், நீதிமன்றத்தில் சாட்சியமளித்த ஒரு சாட்சியின் இல்லத்திற்குப் சுரேஸ் சாலேவின் புலனாய்வு அமைப்புகள் சென்றிருந்ததாகத் தெரிவித்துள்ளது.

இந்நிலையில்; சம்பவம் தீவிரமாக எடுத்துக் கொள்ளப்படும் என்றும், இது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், தேவைப்பட்டால், பாதிக்கப்பட்டோர் மற்றும் சாட்சிகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.


No comments