10வது வருடத்திலும் கண்ணீரே மிச்சம்!

 




வடக்கு - கிழக்கு பகுதிகளில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் 2017 பிப்ரவரி 20ஆம் தேதி கிளிநொச்சி கந்தசாமி கோவில் முன்றலில் ஆரம்பித்த தொடர் கவனயீர்ப்பு போராட்டம் தீர்வேதுமின்றி 10வது ஆண்டினுள் காலடி எடுத்து வைத்துள்ளது.

இன்று வியாழக்கிழமையுடன் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களது குடும்பங்களது போராட்டம் கிளிநொச்சியின் 3,287 நாட்களை கடந்துள்ளது.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களது குடும்பங்கள் , யுத்தம் முடிவடைந்து 16 ஆண்டுகள் கடந்தும் தங்கள் பிள்ளைகளின் நிலைமை குறித்து எந்த அரசும் தெளிவான பதில் அளிக்கவில்லை என குற்றஞ்சுமத்தியே வருகின்றனர்.

சரணடைந்தவர்கள், வெள்ளை வான்களில் கடத்திச் செல்லப்பட்டவர்கள், விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டவர்கள் என பல ஆயிரக்கணக்கானோரின் நிலை இன்று வரை தெரியவில்லை .

யுத்தத்திற்குப் பின்பு ஆட்சிக்கு வந்த ஐந்து அரசுகளும் பொறுப்புக்கூறத் தவறிவிட்டன. குற்றத்தை ஏற்றுக்கொள்ளாமலும், இராணுவத்தைப் பொறுப்புக்கூறச் செய்யாமலும் இருக்கும் நிலையில் உள்நாட்டு விசாரணைகளால் நீதி கிடைக்காது  

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு சாட்சிகளாக இருந்த 400-க்கும் மேற்பட்ட தாய் - தந்தையர்கள் தங்கள் பிள்ளைகளின் நிலை அறியாமலேயே மரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments