13:மூச்சே விடாத இந்தியா!
இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையிலான முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு இன்று புதுடில்லியில் உள்ள ஹைதராபாத் மாளிகையில் இடம்பெற்றுள்ளது.
இலங்கை – இந்திய இடையிலான வரலாற்று ரீதியான உறவுகளை மேலும் வலுப்படுத்தி, இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார, வர்த்தக மற்றும் கலாச்சார ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து விரிவாகக் கலந்துரையாடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, ‘டித்வா’ சூறாவளி அனர்த்தத்தின் போது இலங்கைக்கு வழங்கிய விசேட ஒத்துழைப்பிற்காக ஜனாதிபதி, இந்தியப் பிரதமருக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார்.
இதனிடையே தனத இந்திய விஜயத்தின்போது அதிகாரப்பகிர்வு மற்றும் மாகாணசபைத் தேர்தல் தொடர்பாக இந்திய தரப்பினருடன் எவ்வித பேச்சுவார்த்தையும் இடம்பெறவில்லை என ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
எனினும் மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கு தமது கட்சி எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை எனக் குறிப்பிட்ட அவர், அதனை நடத்தும் நிலைப்பாட்டில் உள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்திய தரப்பிலிருந்து இது தொடர்பாக எவ்வித நினைவூட்டல்களும் செய்யப்படவில்லை. எமது கலந்துரையாடல்கள் பொருளாதார அபிவிருத்தி மற்றும் அதற்குத் தேவையான தொழில்நுட்ப உதவிகளை பெற்றுக்கொள்வது தொடர்பிலேயே அமைந்திருந்தன.
தற்போதைய சூழலில் நாட்டின் பொருளாதார முன்னேற்றமே முதன்மையானது என்பதால் அதற்கான ஒத்துழைப்பு வழங்குவதில் இந்தியா அர்ப்பணிப்புடன் உள்ளதெனவும் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

Post a Comment