இந்திய புறாக்கள் நெடுந்தீவில்!



 இந்தியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட புறாக்கள் நெடுந்தீவில் மறைத்து வைத்திருந்தநிலையில் மீட்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் இருந்து இரு தினங்களிற்கு முன்னர் 144 புறாக்கள் கடல் வழியாக கடத்தி வரப்பட்டு நெடுந்தீவில்  ஓர் வீட்டில் மறைத்து வைக்கப்பட்டுள்ளது. மறைத்து வைத்திருக்கும் புறாக்களை பகுதி பகுதியாக யாழ்ப்பாணம் கடத்த திட்டமிட்டனர். இதில் முதல் கட்டமாக நேற்றைய தினம் 44 புறாவை குறிகட்டுவான் பகுதிக்கு எடுத்து வரப்பட்டபோது 44 புறாக்களுடன்  மூவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட மூவரும் ஊர்காவற்றுறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின்  அடிப்படையில் இந்தியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட மேலும் நூற்றிற்கும் மேற்பட்ட புறாக்கள் நெடுந்தீவில் மறைத்து வைத்திருக்கும் தகவலை உறுதி செய்தனர்.

மறைத்து வைத்திருக்கும் புறாக்களை மீட்பதற்காக பொலிஸார் வருவதனை அறிந்த வீட்டின் உரிமையாளர்கள் புறாக்கள் அடைத்து வைத்திருந்த இடத்திற்கு  தீ வைத்துள்ளனர்.


No comments