அடுத்த சபாநாயகரிற்கும் ஆப்பு!
இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையத்தில் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற சபாநாயகர் டாக்டர் ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிரான முக்கிய ஊழல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளது.
இரண்டு அதிகாரப்பூர்வ வாகனங்களுக்கு உரிமை இருந்தாலும், அவர் மேலும் 03 அதிகாரப்பூர்வ வாகனங்களைப் பயன்படுத்தினார் .பொலன்னறுவை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது சுமார் இரண்டு மில்லியன் ரூபாய் எரிபொருள் கொடுப்பனவுகளையும் சட்டவிரோதமாகப் பெற்றார் என குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது.
சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லம் அவரது வசம் இருந்தபோது, ஜனவரி 2025 முதல் கொழும்பு 04, லோரிஸ் லேனில் அமைந்துள்ள ஒரு அரசாங்க உத்தியோகபூர்வ இல்லத்தையும் அவர் தனிப்பட்ட பயன்பாட்டிற்காக சட்டவிரோதமாகப் பெற்றுள்ளார்.
அத்துடன் சபாநாயகரின் தனிப்பட்ட செயலாளரின் மற்றும் தனிப்பட்ட ஊழியர்களின் விவரங்கள் மற்றும் கொடுப்பனவுகள் குறித்த தகவல்களை வேண்டுமென்றே வழங்க மறுத்தல் மற்றும் நாடாளுமன்றச் செயலாளர் நாயகத்தின் நிர்வாக மற்றும் ஒழுங்கு அதிகாரங்களில் தலையிடுதல், அதிகாரிகளின் பதவி உயர்வுகள் மற்றும் வெளிநாட்டு உதவித்தொகைகளில் சட்டவிரோதமாக செல்வாக்கு செலுத்துதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களே முன் வைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே முன்னாள் சபாநாயகர் தனது போலியாக கல்விசான்றிதழ்களை வழங்கியதான குற்றச்சாட்டுக்களையடுத்து பதவி விலகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment